தேவஸ் நிறுவனத்தின் மீது ரூ.1585 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை!

செயற்கைக்கோள் சேவை நிறுவனமான தேவஸ் மல்டிமீடியா, 579 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில், அந்நிறுவனத்தின் மீது 1585 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது அமலாக்கத்துறை.
 | 

2004ம் ஆண்டு துவக்கப்பட்ட தேவஸ்(Devas) நிறுவனம், சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை முதலீடு செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, விதிகளை மீறி 579 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக  முதலீடுகள் பெற்றதாக தெரியவந்தது. 

இந்நிலையில், இன்று இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, "தேவஸ் நிறுவனம், அதன் இயக்குனர்கள்,வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவை FEMA விதிகளை மீறி, சட்டவிரோதமாக 579 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதனால், அந்நிறுவனத்தின் மீது 1585 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" என கூறியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP