இந்திய அரசின் கோரிக்கை; குழப்பத்தில் வாட்ஸ்ஆப்!

வாட்ஸ்ஆப்பில் பரவும் போலி செய்திகளையும், வதந்திகளையும் பரப்புபவர்களை கண்டுபிடிக்க இந்திய அரசு வைத்த கோரிக்கையால் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடும் குழப்பத்தில் உள்ளது.
 | 

இந்திய அரசின் கோரிக்கை; குழப்பத்தில் வாட்ஸ்ஆப்!

வாட்ஸ்ஆப்பில் பரவும் போலி செய்திகளையும், வதந்திகளையும் பரப்புபவர்களை கண்டுபிடிக்க இந்திய அரசு வைத்த கோரிக்கையால் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடும் குழப்பத்தில் உள்ளது. 

சமீப காலமாக வாட்ஸ்ஆப் மூலம் பல வதந்திகள் பரவி வருவதனால், இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களும், பலர் கொடூரமாக தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குழந்தை கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட வதந்திகளால், தமிழகத்தின் பல பகுதிகளில் கூட பொதுமக்கள் சேர்ந்தும் சிலரை அடித்து கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதையடுத்து வாட்ஸ்ஆப்பில் பரவப்படும் வதந்திகளை மக்கள் உண்மெயென்று நம்புவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் முயற்சித்து வருகின்றன.

இதற்காக வதந்திகளை பரப்பும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மெசேஜ்கள் அனைத்தும் 'எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், யாரிடம் இருந்து யாருக்கு மெசேஜ்கள் செல்கின்றன என்ற விவரங்கள் அந்த நிறுவனத்துக்கே தெரியாது. 

சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை வாட்ஸ்ஆப் கொண்டு வந்தது, உலகம் முழுவதும் அந்நிறுவனத்திற்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது. உலகம் முழுவதும் நூறுகோடிக்கும் மேலானோர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப், இதனால் தனித்தன்மை உடையதாக பார்க்கப்படுகிறது. 

ஆனால், இந்திய அரசாங்கம், போலி செய்திகள் பரவுவதை தடுக்க, அவற்றை பரப்புபவர்களை கண்டுபிடிக்க வழிவகை செய்யுமாறு வாட்ஸ்ஆப்பை அணுகியது. ஆனால், தங்கள் வடிவமைப்பே, இதுபோன்ல மெசேஜ்களை பார்க்க கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளதால், அந்நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது இந்த விஷயத்தில் உதவாவிட்டால், அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ஐடி துறை வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

உலகம் முழுவதும் போற்றப்படும் தங்களது எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தை நீக்கினால் மட்டுமே அதை செய்ய முடியும் என்பதால், வாட்ஸ்ஆப் நிறுவனம் கடும் குழப்பத்தில் உள்ளது. இதை மீறி தங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்றும் இந்திய தரப்பில் இருந்தும் தெளிவாக கூற மறுக்கிறார்கள் எனவும் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP