வருகிறது ஊபர் ஆட்டோ!

வருகிறது ஊபர் ஆட்டோ!
 | 

வருகிறது ஊபர் ஆட்டோ!


உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் புக் செய்யும் டாக்சி சேவை நடத்தி வரும் ஊபர் நிறுவனம் இந்தியாவில் ஓலாவுடன் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. 

இரு நிறுவனங்களும் டேக்சியை ஷேர் செய்வது முதல் பல புதிய சேவைகளை வழங்கி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன. இந்திய நிறுவனமான ஓலா, டேக்சியுடன் ஆட்டோ சேவைகளையும் கொடுத்து வருவதால் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 

எனவே, அதனை வீழ்த்த தானும் தற்போது ஆட்டோ சேவைகளை கொண்டு வர ஊபர் முடிவு செய்துள்ளது. இந்த சேவையை புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் முதன்முதலாக கொண்டுவர ஊபர் திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சேவை துவங்கிறது.

விரைவில் மற்ற நகரங்களுக்கும் ஊபர் ஆட்டோ சேவை கொண்டு வரப்படும் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP