கிறிஸ்துமஸ் பண்டிகை; அதிரடி ஆஃபர் வழங்கும் ஜெட் ஏர்வேஸ்!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை புக் செய்யும் குறிப்பிட்ட டிக்கெட்டுகளுக்கு, 30 சதவீத ஆஃபரை வழங்குவதாக அறிவித்துள்ளது
 | 

கிறிஸ்துமஸ் பண்டிகை; அதிரடி ஆஃபர் வழங்கும் ஜெட் ஏர்வேஸ்!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை புக் செய்யும் குறிப்பிட்ட டிக்கெட்டுகளுக்கு, 30 சதவீத ஆஃபரை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பயணிகளுக்கு புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் செய்யும் பயணங்களுக்கு, இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை 30% ஆஃபருடன் டிக்கெட் புக் செய்ய முடியுமாம். 66 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தடங்களில் இந்த ஆஃபரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம், என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி 7ம் தேதி முதலான சர்வதேச விமான பயணங்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்கும். அதேபோல ஜனவரி 8ம் தேதி முதலான உள்ளூர் 'எகானமி க்ளாஸ்' பயணத்திற்கும், ஜனவரி 1ம் தேதி முதலான பிரிமியர் கிளாஸ் பயணத்திற்கும் இந்த ஆஃபர் செல்லும். மஸ்கட், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு இந்த ஆஃபர் மூலம் டிக்கெட் புக் செய்ய முடியாதாம். இதுபோக ஜெட் ஏர்வேஸ் மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தில் புக் செய்யும்போது மேலும் பல கூடுதல் ஆஃபர்களை வழங்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP