ரிலையன்ஸ் ஏர்டலுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்

ரிலையன்சின் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் போட்டி போட பிஎஸ்என்எல் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
 | 

ரிலையன்ஸ் ஏர்டலுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பிறகு இந்திய தொலைத்தொடர்பு சந்தையில்  கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதும் ஜியோ பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. இந்திய தொலை தொடர்பு சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல், டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்கனவே கடும் போட்டி நிலவுகிறது.

ரிலையன்சின் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் போட்டி போட பிஎஸ்என்எல் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. 171ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் நாளுக்கு 2ஜிபி 3ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் இந்தியா முழுக்க அளவற்ற இலவசக் கால்கள் கிடைக்கும். இப்புதிய பேக்கின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதன்படி ஒரு ஜிபி டேட்டா 2 ரூபாய் 85 பைசாவுக்குக் கிடைக்கிறது. இதே சேவையை 198 ரூபாயில் ஜியோ வழங்குகிறது. மேலும் ஜியோவை விட பிஎஸ்என்எல்-இல் வேலிடிட்டி கூடுதல். இப்புதிய பிஎஸ்என்எல் பேக்கில் அளிக்கப்படும் இலவசக் கால்களுக்கு எவ்வித தினசரி எல்லைகளும் கிடையாது.

முன்பே கூறியிருந்படி இதே சேவையை ஜியோ 198 ரூபாய்க்கு அளிக்கிறது. ஏர்டெல் 199 ரூபாய்க்கு அளிக்கிறது. ஆனால் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே. பிஎஸ்என்எல்லில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதுமட்டுமின்றி கடந்த மாதம் சென்னை, தமிழ்நாடு வட்டங்களில் 19ரூபாய்க்கான சிறப்பு டாரிப் வவுச்சர்களை (STV) பிஎஸ்என்எல் அறிமுகம் செய்தது. இதில் ஆன்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 15பைசாவும் ஆப்-நெட் அழைப்புகளுக்கு 35பைசாவும் ஆகும். இதன் வேலிடிட்டி 54 நாட்கள் மட்டுமே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP