திவாலானது ஜியோனி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நீதிமன்றம்

சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் கடன் தொகை 20 ஆயிரம் 300 கோடி ரூபாயை திருப்பி தராததால் திவாலாகி விட்டதாக ஷென்சென் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 | 

திவாலானது ஜியோனி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நீதிமன்றம்

சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் கடன்களை திருப்பி தராததால் திவாலாகி விட்டதாக  ஷென்சென் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பிரபல ஸ்மார்ட் நிறுவனமான ஜியோனி சீனாவை சேர்ந்தது. கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் சரிவை சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி  இந்த நிறுவனத்தின் கடன் தொகை 20 ஆயிரம் 300 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவரான லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்து விட்டதாகவும் எனவே அந்நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோனி நிறுவன தலைவர் லியு லிரோங் கூறியதாவது சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தது உண்மை என்றும் ஆனால் நிறுவனத்தின் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் சூதாட்டத்தில் 144 மில்லியன் டாலர்களை மட்டுமே இழந்தேன். ஜியோனி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 290 கோடி டாலர்களை 648 சிறு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்க வேண்டி இருந்தது. இந்நிறுவனத்திற்கு கடந்த 2013 முதல் 2015க்குள் மட்டும் சுமார் 1.44 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP