திவாலாகிறது ஏர்செல்... செயலிழந்தது ஜியோ!

கடும் நஷ்டத்திலும் பிரச்சனைகளிலும் இயங்கி வரும் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது.
 | 

திவாலாகிறது ஏர்செல்... செயலிழந்தது ஜியோ!

திவாலாகிறது ஏர்செல்... செயலிழந்தது ஜியோ!

கடும் நஷ்டத்திலும் பிரச்சனைகளிலும் இயங்கி வரும் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஜியோ நெட்வொர்க்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ மார்கெட்டுக்குள் நுழைந்த பிறகு, சிறிய மொபைல் ஆபரேட்டர்கள் அதன் அதிரடி விலை குறைப்புடன் போட்டி போட முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம், ஏர்செல்லின் தாய் நிறுவனமான மேக்சிஸ், மேலும் ஏர்செல் மீது முதலீடுகளை செய்ய மறுத்துவிட்டதாக தெரிய வந்தது. அதனால், ஏர்செல் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்க முடிவெடுத்தனர்

இதற்கிடையே, ஏர்செல் நிறுவனத்துக்கும், மொபைல் டவர் நிறுவனங்களுக்கும் இடையே பண பாக்கி இருந்ததால், பல இடங்களில் ஏர்செல் மொபைலுக்கான சேவைகள் தடைபட்டது. விரைவில் எல்லாம் சீரமைக்கப்படும் என அந்நிறுவனம் கூறி வந்த நிலையில், தற்போது இந்திய கம்பெனி சட்ட நீதிமன்றத்தில் திவால் ஆனதாக அறிவிக்க மனு தொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே இன்று மாலையில் இருந்து ஜியோ நெட்வொர்க்கிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களால் அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை. யாருக்கும் காலும் வரவில்லை. இதனால், போன் செய்ய முடியாமல் மக்கள் தவித்துப்போயுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP