ரூ.39,000 கோடி கடனை அடைக்க அனில் அம்பானி புதிய திட்டம்!

ரூ.30,000 கோடி கடனை அடைக்க அனில் அம்பானி புதிய திட்டம்!
 | 

ரூ.39,000 கோடி கடனை அடைக்க அனில் அம்பானி புதிய திட்டம்!


ரிலையன்ஸ் RCom நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசினார். அப்போது, கடும் கடனில் மூழ்கியுள்ள RCom நிறுவனத்தின் சொத்துக்களை வைத்து, 39,000 கோடி ரூபாய் கடனை அடைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் கடனை மாற்றியமைத்த பிறகு, தங்களது தொழில்முறையை B2B என்ற நுகர்வோர் அல்லாமல், நிறுவனங்களுக்கு இடையே உள்ள தொழிலாக மாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

45,000 கோடி ரூபாயாக உள்ள அந்நிறுவனத்தின் கடன் சுமைகளை முற்றிலும் மாற்றியமைத்து, இந்த திட்டத்தின் மூலம் 6,000 கோடி ரூபாயாக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம், சீன வளர்ச்சி வங்கி, தன்னிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ரிலையன்ஸ் RCom நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP