அமேசான் புதிய திட்டத்தால் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து..?

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வீடியோ விளம்பரங்கள் மூலம்தான் அதிகமாக வருவாயை ஈட்டுகின்றன. அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தினால் விளம்பர வருவாய் வீழ்ச்சி அடையக்கூடும் என கூறப்படுகிறது.
 | 

அமேசான் புதிய திட்டத்தால் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து..?

அமேசான் நிறுவனம் தனது மொபைல் அப்ளிகேஷனில் புது விதமான விளம்பரங்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களின் வருவாய் குறையக்கூடும் என கூறப்படுகிறது. 

இந்தியாவில் மிக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று, அமேசான்.  இந்த நிறுவனம் தற்போது தனது மொபைல் அப்ளிகேஷனில் புதிய முறையில் விளம்பரங்களுக்கு இடம் அளிக்கவுள்ளதாகவும்,  இதற்காக ஐபோன்களுக்கான அமேசான் அப்ளிகேஷனில் சோதனை செய்துவருவதாகவும் தெரிகிறது. 

வீடியோ விளம்பரங்களை அமேசான் அப்ளிகேஷனில் இடம்பெறச் செய்வதே, இதன் முக்கிய அம்சம் ஆகும்.   ஒரு வாடிக்கையாளர் ஏதேனும் ஒரு பொருளை அமேசான் ஆப்பில் தேடும்போது, அதற்கான முடிவுகளுக்கு மத்தியில் விளம்பரங்களும் இடம்பெறும்.

ஏற்கனவே பேஸ்புக் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது.  கூகுள் நிறுவனம் தனது யூடியூப் வீடியோக்களில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது. இதே முறையை அமேசானும் பின்பற்ற உள்ளது எனத் தெரிகிறது.  கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வீடியோ விளம்பரங்கள் மூலம்தான் அதிகமாக வருவாயை ஈட்டுகின்றன.  அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தினால் விளம்பர வருவாய் வீழ்ச்சி அடையக்கூடும் என கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP