டவுன்லோடில் ஏர்டெல்; 4ஜி-யில் ஜியோ நம்பர் ஒன்!

4ஜி சேவைத்தரம் குறித்து நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், டவுன்லோடு வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும், விரிவான 4ஜி சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சமீப காலமாக கடும் போட்டி நிலவி வருகிறது. ஜியோவின் அறிமுகத்துக்கு பின், 4ஜி சேவைக்கான கட்டணம் கணிசமாக குறைந்துள்ளது. வரலாறு காணாத அளவில் நாட்டு மக்கள் 4ஜி சேவைகளையும் மொபைல் டேட்டாவையும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஓபன் சிக்னல் ரிப்போர்ட் என்ற நிறுவனம் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4ஜி சேவைத்தரம் குறித்து நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், டவுன்லோடு வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாகவும், ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 7.53 Mbps வேகத்தில் ஏர்டெல்லிலும், 5.47 Mbps வேகத்தில் ஜியோவிலும் ஃபைல்களை டவுன்லோடு செய்ய முடிகிறதாம். 

அதேபோல, விரிவான 4ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடத்தில் உள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ஜியோவின் 4ஜி சிக்னல் 95 சதவீதத்திரும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளதாம். இரண்டாம் இடத்தில் உள்ள ஏர்டெல், வெறும் 73.99 சதவீத மதிப்பெண்களை தான் பெற முடிந்தது. 

இந்த சர்வே நடத்தியபோது, வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்று சேராததால், அவை இரண்டுமே தனித்தனி நிறுவனங்களாகவே கணக்கிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP