திவாலாகிறது ஏர்செல் நிறுவனம்!

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல், திவாலானதாக அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

திவாலாகிறது ஏர்செல் நிறுவனம்!


பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல், திவாலானதாக அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர்செல், மேலும் தொடர வாய்ப்பில்லை என தெரிகிறது. சுமார் ரூ.15,500 கோடி கடனில் உள்ள நிலையில், ஏர்செல் நிர்வாகம் வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. ஆனால், கடன்களை மாற்றியமைக்க, சுமூகமான தீர்வுக்கு வரமுடியவில்லை.

ஏர்செல்லின் தாய் நிறுவனமான மலேசியாவின் மேக்சிஸ், ஏர்செல் நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்ய இருந்தது. ஆனால்,  தற்போது மேக்சிஸ் மேலும் முதலீடுகள் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம், திவாலானதாக பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஏர்செல் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கிய பிறகு, பல சிறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டோ அல்லது பெரிய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டோ வந்த நிலையில், கடைசியாக எஞ்சியிருந்த சிறிய நிறுவனமான ஏர்செல்லும் தற்போது திவால் நிலைக்கு சென்றுள்ளது. பி.எஸ்.என்.எல் தவிர, ஏர்டெல், வோடபோன் -ஐடியா மற்றும் ஜியோ என்றார் 3 பெரு நிறுவனங்கள் மட்டுமே தற்போது தொலைத்தொடர்புத் துறையில் எஞ்சியுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP