ஏர் இந்தியா பங்குகள் விற்பனை இப்போதைக்கு இல்லை

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
 | 

ஏர் இந்தியா பங்குகள் விற்பனை இப்போதைக்கு இல்லை

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. 

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் அதன் 76 சதவீதம் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து சர்வதேச அளவில் மார்ச் 28ந்தேதி தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கோரப்பட்டது. விருப்ப மனுக்களை தனியார் நிறுவனங்கள் சமர்ப்பிதற்கு கடைசி நாள் மே 31 என்றும், தகுதியானர்வகளுக்கு ஜூன் 15ம் தேதி தகவல் தரப்படும் என்னும் மத்திய அரசு தெரிவித்தது. 

ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் போது 25 சதவீதம் பங்குகள் அரசு கையில் இருப்பதை சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. எனவே மொத்த பங்குகளையும் விற்று விட மத்திய அரசு முடிவு செய்தது. 

இந்நிலையில், புதுடெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, நிதின் கட்காரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை தற்சமயம் ஒத்திவைக்கவும், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்காக போதிய அளவு நிதி உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP