அடேங்கப்பா...பேஸ்புக் பங்குகள் அதளபாதாள வீழ்ச்சி!

பேஸ்புக் பங்குகள் அந்நிறுவன வரலாற்றிலேயே முதல்முறையாக நேற்று ஒரே நாளில் ரூ.8.2 லட்சம் கோடி சரிந்தது.
 | 

அடேங்கப்பா...பேஸ்புக் பங்குகள் அதளபாதாள வீழ்ச்சி!

பேஸ்புக் பங்குகள் அந்நிறுவன வரலாற்றிலேயே முதல்முறையாக நேற்று ஒரே நாளில் ரூ.8.2 லட்சம் கோடி சரிந்தது.

இரு தினங்களுக்கு முன் பங்குச்சந்தை மூடும்போது பேஸ்புக் நிறுவன பங்குகள் 630 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், வியாழனன்று சந்தை மூடும் போது, அதன் பங்குகள், 510 பில்லியன் டாலர்களாக குறைந்தது. 120 பில்லியன் டாலர்கள் (8.2 லட்சம் கோடி ரூபாய்) குறைந்தது தான், பேஸ்புக் நிறுவன வரலாற்றிலேயே ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் அறிக்கையில், அதன் வருவாய் மற்றும் வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டது.

பேஸ்புக்கின் மொத்த மதிப்பில், 19% சரிந்து, பங்குகளின் விலை 176.26 டாலர்களாக இருந்தது. சுமார் 17 கோடி பங்குகள் கைமாறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP