சர்வதேச டாப் 500 பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள்!

சர்வதேச அளவில் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
 | 

பார்ச்சூன் என்ற பத்திரிகை, சர்வதேச அளவில், மிகப்பெரிய நிறுவனங்களை பட்டியலிட்டு வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில், 7 இந்திய நிறுவனங்கள் இடப்பெற்றுள்ளன. அதில், அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) இந்திய நிறுவனங்களில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 168வது இடத்தில் இருந்த ஐ.ஓ.சி, இந்த முறை 137வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய தனியார் நிறுவனங்களில், ரிலையன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. எண்ணெய், இயற்கை எரிவாயு, மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ், ஜியோவின் மாபெரும் வெற்றியால், 55 இடங்கள் முன்னேறி, 148வது இடத்தை பிடித்துள்ளது. 

மற்றொரு இந்திய அரசு எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி 197வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் அமெரிக்க சூப்பர்மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP