நானோ கார்களுக்கு 'குட்பை' சொல்கிறதா டாடா மோட்டார்ஸ்?

விற்பனை குறைந்ததால் நானோ கார்களின் உற்பத்தி பணிகளை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
 | 

நானோ கார்களுக்கு 'குட்பை' சொல்கிறதா டாடா மோட்டார்ஸ்?

விற்பனை குறைந்ததால் நானோ கார்களின் உற்பத்தி பணிகளை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

குறைந்த விலையில் கார்கள் விற்பனை செய்வது ரத்தன் டாடாவின் கனவாக இருந்தது. அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடுத்தர குடும்பங்கள் பயன்படும் விதத்தில் நானோ காரை அறிமுகப்படுத்தியது. ரூ. 1 லட்சத்திற்கு கிடைக்கும் இந்த கார்களின் விற்பனை தொடக்கத்தில் அதிகமாக இருந்தது. பலர் அந்த காரை விரும்பி வாங்கினர். ஆனால் அதன்பின் இதன் விற்பனை குறைந்து வருகிறது. இந்த கார்களை விற்க டீலர்கள் தயக்கம் தாக்கி வருவதாக கூறினர். 

ரத்தன் டாடாவின் எண்ணத்தில் உருவான கார் என்பதால், டாடா நிறுவனம் நானோ காரின் உற்பத்தி பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த கார் மின்சார ஆற்றலில் வெளியிடப்படும் என்றும், அதற்கான சோதனை ஓட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றுவருவதாக புகைப்படங்களுடன் டாடா தகவல் தெரிவித்தது. 

ஆனால் தற்போது, இந்த காரின் விற்பனை திறன் குறைந்துள்ள நிலையில் டாடா நிறுவனம் நானோ கார்களின் உற்பத்தியை நிறுத்திட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டாடா நிறுவனம் டீலர்களிடம் தற்போது இருக்கும் டாடா நானோ கார்களை மட்டும் விற்பனை செய்யவும், புதிதாக கார்களுக்கு ஆர்டர்களை பெறவேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP