நானோ கார் உற்பத்தியை நிறுத்த டாடா நிறுவனம் முடிவு

நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விதமாக ரத்தன் டாடாவின் கனவாக அறிமுகப்படுத்தப்பட்ட நானோ காரின் உற்பத்தியை வருகிற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது
 | 

நானோ கார் உற்பத்தியை நிறுத்த டாடா நிறுவனம் முடிவு

2020ஆம் ஆண்டிலிருந்து நானோ கார் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விதமாக ரத்தன் டாடாவின் கனவாக அறிமுகப்படுத்தப்பட்ட நானோ காரின் உற்பத்தியை வருகிற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டிலிருந்து ‌பி.எஸ். 6 தொழில்நுட்பம் உள்ள வாகனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு ‌அறிவித்துள்ளது.

அதன்படி டாடா நானோ கார்களை பி.எஸ். 6 தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வர கூடுதல் செலவாகும் என்பதால் அதன் உற்பத்தியை 2020 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP