1. Home
  2. வர்த்தகம்

கார்கள் விற்பனை மந்தமாகவே இருக்கும்:  மாருதி நிறுவனத் தலைவர் சுனில் பர்காவா

கார்கள் விற்பனை மந்தமாகவே இருக்கும்:  மாருதி நிறுவனத் தலைவர் சுனில் பர்காவா

கார்களின் விலைகள் ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற காரணிகள், மக்களின் கார் வாங்கும் எண்ணத்திற்கு தடைகளாக உள்ளன என்று மாருதி கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சுனில் பர்காவா வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'தற்போது கார்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பொருத்தப்படும் கூடுதல் சாதனங்களான, விபத்து சமயத்தில் உயிர்க்காக்கும் ஆர் பேக் எனப்படும் காற்றுப்பை, நவீன பிரேக்கிங் அமைப்பு போன்றவற்றால் கார்களின் உற்பத்தி விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரு சக்கரத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாற நினைக்கும் நடுத்தர வர்கத்தை சார்ந்தவர்களால் தற்போது உற்பத்தியாகி வரும் சற்றே விலை அதிகரித்துள்ள கார்களை வாங்கத் தயங்குகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கார்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள தொய்விற்குக் காரணம் கட்டமைப்பு மாற்றங்களோ, ஓலா, ஊபர் போன்றவைகளோ இல்லை எனவும், அதிகரித்து வரும் காப்பீட்டுக் கட்டணம், 9 மாநிலங்களில் விதிக்கப்பட்டு வரும் கூடுதல் சாலை வரி, கடன் தர யோசிக்கும் வங்கி அதிகாரிகள் போன்ற வேறு சில காரணிகளும் கார்களின் மந்தமான விற்பனைக்கு காரணங்களாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சீனா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளின் தனி நபர் வருமானத்தையும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் தனி நபர் வருமானத்தையும் கணக்கில் கொள்ளாமல், பிஎஸ் தரம் குறித்து அரசு கொள்கை முடிவுகள் எடுப்பது இந்தியாவிற்கு பொருந்தாது எனவும், இந்திய மக்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டே தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடக்க காலத்தில் ஐிஎஸ்டி வரி விதிக்கப்பட்டருந்ததை விட தற்போது பத்து சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 18 சதவீதமாக வரி விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சாமானிய மனிதர்களின் வாழ்வில், கார் என்பது ஓர் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது என மாருதி கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சுனில் பர்காவா கருத்து வெளியிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like