ஊழல் குற்றச்சாட்டுகளில் நிசான் நிறுவன தலைவர் கைது!

ஜப்பான் நாட்டின் பிரபல கார் நிறுவனமான நாசானின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன், ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
 | 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மிட்சுபிஷி - நிசான்- ரெனால்ட் நிறுவன கூட்டணியின் தலைவருமான கார்லோஸ் கோஸ்ன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஜப்பான் நாட்டு அரசிடம் இருந்து தனது சம்பளத்தை மறைத்ததாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் மீது விசாரணை நடத்திய ஜப்பான் அதிகாரிகள், அவரும் அந்நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரி கிரேக் கெல்லியும் சேர்ந்து பல்வேறு ஆண்டுகளாக மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை ஜப்பான் அரசு கைது செய்துள்ளது. இந்த நிலையில் நிசான் நிறுவனம், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.

64 வயதான கோஸ்ம் கடுமையான சரிவில் இருந்த நிசான் நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரியவர் ஆவார். நிசான், ரெனால்ட் மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்களை சேர்த்து வாகன உலகின் மாபெரும் கூட்டணியை உருவாக்கியதன் மூல காரணமும் இவர்தான்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP