புதிய SUV-யை அறிமுகப்படுத்தியது மகேந்திரா!

இந்தியாவில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்ற பார்ச்சூனர், எண்டேவர் போன்ற SUV ரக கார்களுக்கு நேரடி போட்டியாக, மகேந்திரா நிறுவனம் ஆல்டூராஸ் ஜி4 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.27 லட்சமாகும்.
 | 

புதிய SUV-யை அறிமுகப்படுத்தியது மகேந்திரா!

இந்தியாவில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்ற பார்ச்சூனர், எண்டேவர் போன்ற SUV ரக கார்களுக்கு நேரடி போட்டியாக, மகேந்திரா நிறுவனம் 'ஆல்டூராஸ் ஜி4' என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் எஸ்யூவி கார்களின் மீது மோகம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் கார்கள் மட்டுமல்லாமல், 25-40 லட்ச ரூபாய் வரையிலான சொகுசு SUVக்களின் விற்பனைஎகிறியுள்ளது. ஜப்பானின் இஸுசு நிறுவனத்தின் கார்களும் சமீபத்தில் அதிக விற்பனையை கண்டுள்ளது. ஏற்கனவே போர்டின் எண்டேவர், டொயோட்டாவின் ஃபார்ச்சூனர், மிட்சுபிஷியின் பஜேரோ உள்ளிட்ட சொகுசு SUVக்கள் வாடிக்கையாளர்களை மிகுந்த அளவு கவர்ந்துள்ளது.

இவற்றுக்கு நேரடி போட்டியாக மகேந்திரா நிறுவனம் ஒரு புதிய சொகுசு காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஆல்டூராஸ் ஜி4' என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், மகேந்திராவின் கிளை நிறுவனமான தென் கொரியாவின் சேங்யோங் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் மாடலை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்த காரில் 178 குதிரைத் திறன் பவர் உள்ளது. 2 வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் என இரண்டு மாடல்களில் இந்த கார் வெளியாகிறது. இந்த ஆல்டூராஸ் ஜி4-ன் துவக்க விலை ரூ.26.95 லட்சத்தில் துவங்கி, அதிகபட்சமாக ரூ.29.95 லட்சம் வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP