22 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் ஜாவா பைக்!

ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக்குகளுக்கு நேரடி போட்டியான ஜாவா மோட்டார் சைக்கிள்கள், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. க்ளாஸிக் ஜாவா பைக், ரூ.1.55 லட்சத்திற்கு விற்பனைக்கு வருகிறது.
 | 

22 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் ஜாவா பைக்!

ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக்குகளுக்கு நேரடி போட்டியான ஜாவா மோட்டார் சைக்கிள்கள், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

பிரபல ஜாவா மோட்டர் சைக்கிள்கள், 1960களில் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக்குகளுக்கு நேரடி போட்டியாக வெளியான வந்த ஜாவா பைக் விற்பனை, 1996 ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாவா மோட்டர் சைக்கிளின் புதிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜாவா, ஜாவா 42, ஜாவா பெரக் என்ற பெயரில் மூன்று புதிய மாடல்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.

இவற்றில் ஜாவாவின் விலை ரூபாய் 1.55 லட்சம் என்றும், ஜாவா 42ன் விலை ரூபாய் 1.66 லட்சம் என்றும் விதிக்கப்பட்டுள்ளன. 3வது லிமிட்டட் எடிஷன் மாடலான பெரக், ரூ.1.89 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஆனால் இது வெளியாக இன்னும் சில காலம் ஆகுமாம். 300 சிசி எஞ்சின் கொண்ட ஜாவா 350 சிசி எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டுக்கு நேரடி போட்டியாக அமையும். 

1960களில் இந்தியாவில் ஜாவா பைக்குகளை விற்பனை செய்து வந்த ஐடியல் ஜாவா நிறுவனம், தற்போது மகேந்திரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 'கிளாசிக் லெஜெண்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் பேரில் ஜாவா பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால், க்ரூஸர் பைக் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP