'லிங்க்டு இன்' ஆப்-இல் எமோஜிகள் அறிமுகம்!

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இணையதளமான 'லிங்க்டு இன்' தளத்தில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்று எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 | 

'லிங்க்டு இன்' ஆப்-இல் எமோஜிகள் அறிமுகம்!

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இணையதளமான 'லிங்க்டு இன்' தளத்தில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்று 'எமோஜிகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

'லிங்க்டு இன்' நிறுவனம் வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குவோர் இருவரையும் இணைக்கும் தளமாக செயல்பட்டு வருகிறது. வேலை தேடுவோர், தங்களது தகவல்களை அளிப்பதன் மூலம், அவர்களுக்கேற்ற வேலைகள் பரிந்துரைக்கப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படுவதற்கு, நிறுவனங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை 'லிங்க்டு இன்' பெறுகிறது. 

வழக்கமாக சமூக வலைதள உரையாடுதலில், அதாவது செய்திகள் அனுப்புதலில், எமோஜிகள் முக்கிய பங்காற்றுகின்றன. வார்த்தைகள் எதுவுமின்றி  எமோஜிகளின் மூலமாகவும் சில உரையாடல்கள் அரங்கேறுகிறது. அந்த வகையில்,  பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தற்போது 'லிங்க்டு இன்' ஆப்பிலும் எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக லவ், செலிப்ரட்டிங், க்யூரியஸ் ரியாக்ஷன்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது. பயனாளர்கள் மத்தியில் வரும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP