க்ரோம், யுசி பிரௌசருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 'ஜியோ' பிரௌசர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ் மொழி உள்ளிட்ட 8 மொழிகளில் 'ஜியோ பிரௌசர்' என்ற புதிய பிரௌசரை அறிமுகப்டுத்தியுள்ளது. பயனாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து உபயோகிக்கலாம்.
 | 

க்ரோம், யுசி பிரௌசருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 'ஜியோ' பிரௌசர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ் மொழி உள்ளிட்ட 8 மொழிகளில் 'ஜியோ பிரௌசர்' என்ற புதிய பிரௌசரை அறிமுகப்டுத்தியுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், ஜியோ போன்களும் குறைந்த விலையில் இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், க்ரோம், யுசி பிரௌசர் போன்று  'ஜியோ பிரௌசர்' என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தியர்களின் பயன்பாட்டுக்காக தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய 8 மொழிகளில் இயங்கக்கூடியது.  பயனாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து உபயோகிக்கலாம். 

க்ரோம், யுசி பிரௌசருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 'ஜியோ' பிரௌசர்!

குறைந்த மெமரியில் வேகமாகவும், மிக எளிமையாகவும் பயன்படுத்தக்கூடியதாக ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விலை குறைந்த ஆண்ட்ராய்டு போன்களிலும் இது சிறப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் பிளே ஸ்டோரில் 'ஜியோ பிரௌசர்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மற்ற  பிரௌசர்களில் உள்ளது போன்றே இதிலும் செய்திகள் மற்றும் விடேசாயக்கலை ஷேர் செய்யும் வசதி உள்ளது. 

தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் இயங்கக்கூடிய இந்த ஜியோ பிரௌசர் விரைவில் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP