BMW கார் விலை இந்தியாவில் அதிரடி உயர்வு!

உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களுள் ஒன்றான பிஎம்டபிள்யூ, அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்கப்படும் தனது கார்களின் விலையை 6 சதவீதம் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது
 | 

BMW கார் விலை இந்தியாவில் அதிரடி உயர்வு!

உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களுள் ஒன்றான பிஎம்டபிள்யூ, அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்கப்படும் தனது கார்களின் விலையை 6 சதவீதம் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது

ஜெர்மன் சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ, இந்தியாவில் மிகவும் பிரபலம். இந்தியாவிலேயே தொழிற்சாலைகளை உருவாக்கி, தனது கார்களின் பாகங்களை ஒன்றிணைக்கும் பணிகளையும் BMW செய்து வருகிறது. இதன்படி பிஎம்டபிள்யூ 3, 5, 6 சீரிஸ், x5 எஸ்யூவி உட்பட பல்வேறு மாடல்கள் இந்தியாவிலேயே ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதேபோல வெளிநாடுகளில் இருந்து M4 உட்பட பல்வேறு சொகுசு கார்கள் இந்தியாவுக்கு அப்படியே இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 7915 கார்கள் விற்கப்பட்டுள்ளனவாம். 2019ஆம் ஆண்டு முதல் தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது பிஎம்டபிள்யூ. அந்நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா பேசியபோது, "சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ இந்தியா முன்னிலையில் உள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் BMW இந்தியாவின் கார்கள் 4 சதவீதம் விலை உயர்த்தப்படும். தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு வித்தியாசமான சேவைகளையும், வித்தியாசமான அனுபவங்களையும் BMW  வழங்கி வருகிறது," என்றார். 

இந்தியாவில் சுமார் 520 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள BMW-வின் முக்கிய உற்பத்தி தொழிற்சாலை சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP