1. Home
  2. வர்த்தகம்

தனியார் வெப்சைட்டுகளில் ரயில் டிக்கெட் புக் செய்ய கூடுதல் கட்டணம்

தனியார் வெப்சைட்டுகளில் ரயில் டிக்கெட் புக் செய்ய கூடுதல் கட்டணம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தனியார் இணையதளங்களை பயன்படுத்தும் போது, அவர்களிடம் கூடுதல் கட்டணமாக 12 ரூபாயை வசூலிக்க என இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

இதுவரை, அரசின் irctc.co.in இணையதளம் மற்றும் பேடிஎம், க்ளியர்ட்ரிப் உட்பட பல தனியார் இணையதளங்கள் மூலமாக வடிக்கையளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற டிக்கெட் புக் செய்ய, தனியார் இணையத்தளங்களிடம் பொதுவாக ஒரு தொகையை வசூலித்து வந்த இந்திய ரயில்வே, தற்போது ஒரு டிக்கெட்டுக்கு தலா 12 ரூபாய் வசூலிக்க முடிவெடுத்துள்ளது. இதனால், தனியார் இணையதளங்கள் மூலம் டிக்கெட் புக் செய்ய கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவுக்கு ரயில் டிக்கெட் புக்கிங் தனியார் இணையதளங்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளன. இதனால், தங்கள் இணையதளங்கள் மூலம் டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன், தனியார் நிறுவனங்களிடம், பி.என்.ஆர் ஸ்டேட்டஸ், என்குவைரி போன்ற சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. ஆனால், சமீபத்தில் தனியார் நிறுவன வெப்சைட்டுகளில், இவற்றை பார்த்துக் கொள்ளும் வசதியும் வந்துவிட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like